110 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
245 | : | _ _ |a தொண்டி-தொண்டியம்மன் கோயில் மேடு - |
346 | : | _ _ |a 1980 |
347 | : | _ _ |a சுடுமண்ணாலான காதணி, வட்டு, கருப்பு பச்சை மணிகள், அணிகலன்கள், முதலாம் இராஜராஜ சோழன் காலத்திய செம்புக் காசு, நாயக்கர் கால செம்புக் காசுகள் இரண்டு, இடைக்காலத்தைச் சேர்ந்த பானையோடுகள் |
500 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1980-இல் தொண்டியில் நடத்திய அகழாய்வு ஒரு மாதிரி அகழாய்வாகும். இவ்வூரில் உள்ள தொண்டியம்மன் கோயில் மேட்டில் மாதிரி அகழாய்வுக் குழி ஒன்று 4x4 என்ற அளவில் போடப்பட்டது. முதலாம் இராஜராஜன், நாயக்கர் காலத்திய செம்புக்காசுகள் கிடைத்துள்ளன. மேலும் சுடுமண்ணாலான காதணி, வட்டு, கருப்பு பச்சை மணிகள் ஆகிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி என்னும் சிற்றூர் சங்க கால வாழ்விடப்பகுதியாகும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இவ்வூரில் தொண்டியம்மன் கோயில் என்னும் மேட்டுப்பகுதியில் 1994-95 ஆம் ஆண்டில் அகழாய்வு நடத்தியது. இவ்வகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநரான முனைவர் இரா.நாகசாமி அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் நிகழ்த்தப்பட்டது. இத்துறையில் பணியாற்றிய பதிவாளர் திரு.ம.சந்திரமூர்த்தி மற்றும் காப்பாட்சியர் வே.வேதாச்சலம் ஆகியோர் இவ்வகழாய்வில் பங்கெடுத்து பணியாற்றியுள்ளனர். இவ்வகழாய்வின் மூலம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தொண்டி ஒரு துறைமுக நகரம் என்பது நிரூபணமாகிறது. மேலும் முதலாம் இராஜராஜன் காலத்திய செம்புக் காசு ஒன்றும் மற்றும் இரண்டு நாயக்கர் காலத்திய காசுகளும் கிடைத்துள்ளன. |
653 | : | _ _ |a தொண்டி, இராமநாதபுரம், இராமேசுவரம், சங்க கால வாழ்விடம், அகழாய்வு, தொண்டியம்மன் கோயில் மேடு, சுடுமண் பொருட்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு, தமிழகம், தொல்பொருட்கள், தொல் பொருள் ஆய்வு |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
752 | : | _ _ |a தொண்டி-தொண்டியம்மன் கோயில் மேடு |c தொண்டி |d இராமநாதபுரம் |f இராமேசுவரம் |
914 | : | _ _ |a 9.7438168 |
915 | : | _ _ |a 79.0184586 |
995 | : | _ _ |a TVA_EXC_00022 |
barcode | : | TVA_EXC_00022 |
book category | : | வரலாற்றுக்காலம் |